Monday 24 September 2018

அச்சம் தவிர்த்து உச்சம் தொடு

🔥 "அச்சம் தவிர்த்து உச்சம் தொடு"
எது அச்சம்.....???
எதுவெல்லாம் நம்மை உணர்வு நிலையில் இருந்து
உணர்ச்சி நிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறதோ
அதுவெல்லாம் அச்சம் என்ற நிலைக்கு ஆட்படுகிறது
உணர்வு நிலை என்பது இதமும் மிதமுமான நிலை
உணர்ச்சி நிலை என்பது பயமும், படபடப்புமான நிலை
உணர்ச்சியிலிருந்து தான் உணர்வுக்கு நிலையை அடைய முடியும்
உதாரணமாக
பசி என்பது உணர்ச்சி நிலை
பசியாறிய பின் அதை இன்பமாக உணரும் நிலையே உணர்வு நிலை
உணர்ச்சியை தூண்டி தான் உணர்வு நிலையை எய்த முடியும்
மற்றுமொரு அனுபவம்...
மூச்சிற்குள் மூழ்கி கரைந்து
காணாமல் போக நினைத்த பெண்னை
மின்னலாய் வந்து
மின்சாரமாய் மீட்டெடுத்தது
மன்னவனின் மெல்லிய முத்தம்
மூசிற்குள் மூழ்கி இருந்தது உணர்வு நிலைக்கு போகும் முயற்சி
அந்த உணர்வு நிலையை மன்னவனின் முத்தமொன்று
முதலில் உணர்ச்சியை தூண்டி,
ஒருவித பயத்தையும், பதட்டத்தையும் கொடுத்து
அதை அனுபவித்து ஏற்றுக் கொள்ளும் நிலையே உணர்வு நிலை
உணர்ச்சி நிலையே உணர்வு நிலைக்கு அச்சாரம்
ஆனால்,
உணர்ச்சியில் மயங்கியோ, அல்லது பயந்தோ சிக்கி நின்றால்
உணர்வு நிலையை உணர முடியாமல் போகும்
உணர்ச்சியை ஏற்றுக் கொண்டால்
உணர்வு நிலையின் ஊற்றுக்குள் உறைந்திட முடியும்
அச்சத்தை தவிர்த்தால் உச்சத்தை தொட முடியும் என்பது உறுதியாகிறது அல்லவா....???
எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை
ஏற்றுக் கொண்டாலே போதும் 🔥
💥 உணர்வின் உச்சத்தில் : உள் முக பயணம்

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...