Tuesday, 18 September 2018

10 மாத வாழ்க்கையில்

தாயின் வயிற்றில் இருக்கும் 10 மாத வாழ்க்கையில் நடப்பவை என்ன? மனித வாழ்வில்ஜீவன் 9 கிரகங்களின் ஆதிக்கமே என்பதை நம் சித்தர்கள் அன்றே கண்ட மெஞ்ஞானம், ஆம் கருப்பை முதல் கல்லரை வரை மனிதனை இயக்குவது கிரகங்களே! முதல் மாதத்தில் சுரோணிதமும், சுக்கிலமும் இரண்டற கலக்க காரணமாவதே சுக்கிரதேவனால் இரண்டாவது மாதத்தில் கரு பிண்டமாக வளர செவ்வாய் தேவனும் மூன்றாம் மாதத்தில் கைகால் அங்கங்கள் வளர குருதேவனும் நாங்காம் மாதத்தில்எலும்பு நரம்பு வளர சூரியன்தேவனும், ஐந்தாம் மாதத்தில் தோலை சந்திரன்தேவனும்,ஆறாம் மாதத்தில் நகம் ரோமத்தை சனி தேவனும், எட்டாம் மாதத்தில் பிராணன் அதாவது புத்தியை புதன் பகவானும், ஒன்பதும் பத்தும் மாதத்தில் பூர்ண சிசுவாக மீண்டும் சந்திர தேவனால் முழுமை அடைந்து இந்த உலகை காண அவரவர் செய்த பாவ புண்ணிய படி பிரசவமாகிறது, ஆக 9 கிரகங்களே இந்த உடம்பின் பிரதாண அதிபதிகள், ஆகையால் கிரகங்களை வணங்கி பரி காரங்கள் செய்து வாருங்கள் என்று உங்களை தலை வணங்கி கேட்டுக்கொள்கிறேன். எல்லாமே சுலபமாக நடக்கும்.

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...