Monday 8 October 2018

திருமந்திரமும்_வாழ்வியலும்!

#திருமந்திரமும்_வாழ்வியலும்!
திருமூல நாதர் சித்தர் தன் மோனத்தில் இருந்து வருடம் ஒரு முறை உதித்து, ஒரு பாடலை இயற்றி பின் நிட்டையில் சென்றார் என்று செவி வழி கதைகள் கூறுகிறது. இவ்வாறு அய்யன் 3000 ஆண்டுகள் இயற்றி மந்திர பாடல்களே பின் "திருமந்திரம்" என்ற பெயரை கொண்டு தொகுக்க பெற்றது. வேதங்களுக்கும் உபநிஷட்களுகும் இணையான ஒரு தமிழ் மறை நூலாக இப்பாடல்கள் விளங்குகிறது. இந்த சம்பவம் நடந்த இடம் ஆடுதுறை ஆகும். இதன் அருகே வுள்ள திருவாவடுதுறை கோவிலில் அக்கால வனமாகவும். அதன் ஒரு மரத்தின் அடியில் தவம் இயற்றி வரைந்த நூலே திருமந்திரம்.
யோக சூத்திரங்களில் இந்நூல் பதஞ்சலி முனிவரின் வடமொழி பாடல்களுக்கு இணையானது. இறைவன் என்னை நன்றாக படைதான் தன்னை நன்றாக தமிழ் செய்ய என்று கூறுகிறார்
"பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்திலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"
அய்யன் மற்றும் இதர சித்தர்கள் எழுதும் மந்திரங்கள் அகத்தில் இருந்து வருவது. அகத்திலிருந்து வரும் போதமே அகவல். புறத்திலிருந்து வரும் கருத்துக்கள் வெறும் தகவலே.
இவ்வாறு அகத்தில் கண்ட அனுபவத்தை திருமூலர் சித்த பெருமான் நமக்கு இங்ஙனம் உரைக்கிறார்..
உள்ளம் பெரும் கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தவர்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளபுலன் ஐந்தும் காணா மணி விளக்கே
இது பாடல் மற்றும் அல்ல இதனை கோவில் வடிவமாகவும் தில்லையில் காணலாம். அய்யன் சீவ தலமான சிதம்பரத்தில் கோவில் கட்டுமானமே நம்மை நமக்கு உணர்த்தும் தத்துவமாக விளங்குகிறது. பொன்னம்பலம் மேல் உள்ள தங்க ஓடுகளின் எண்ணிக்கை 21,600. இது நமது சுவாச காற்று இனையாக உள்ளது. அதன் மேல் பொருந்திய தங்க ஆணிகள் கணக்கு 72000. இது நமது நாடி கணக்கு. வெட்டவெளி என்னும் ஆகாய தலத்தில்பொன்னம்பல மேடையில் சிவசக்தி தாரணை பிரதானரகசியமாய் வெளியாகிறது.இதே நம்முள் இருக்கும் சொர்ண தத்துவம்.
இப்படி பட்ட சொர்ணமான உத்தமன் உள்ளிருக்க அவனை வெளியே
விடாமல் பலகாலம் வேண்ட வழிகளை கீழே அய்யன் சொல்கிறார்
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
இவ்வாறு உயிர் வளர்த்து நாம் காணும் இறைவன் என்ன உணர்வுடன் இருக்கிறான்? அவனும் அன்பும் ஒன்று தான் வேறு இல்லையென்று அய்யன் தெளிவாக கூறுகிறார்
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
ஆகையால் நாம் உயர் நிலை வந்தால் தான் அன்பு வருமா ? அல்லது அன்பு வந்தால் தான் உயர் நிலை வருமா ? குழப்பம் வேண்டாம் கீழே பாருங்கள்.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.
வில்வதையோ, துளசியை , அருகம்புல்லை வைத்து கூட இறைவனுக்கு அன்பை செலுத்துங்கள். பசுவிற்கு ஒரு வாய் புல் அன்புடன் கொடுங்கள். உண்ணும் பொது ஒரு கவளத்தை முன் வாசலிலோ பின்புறமோ மற்ற உயிரினத்துக்கு அன்போடு அளியுங்கள். சுற்றி இருக்கும் பிறர்க்கு அன்புடன் இன்சொல் கூறுங்கள்.
இது பேர் அன்பு. இதை செய்தால் தெய்வத்தின் அருள் கிட்டும். அது கிட்டினால் பிரபஞ்சம் மற்றும் சித்தர்கள் அன்பு நமக்கு நேரிடையாக கிடைக்கும். அது கிடைத்தால் தன்னை தான் அறியும் ஆசியும் வழியும் கிட்டும். அதுவே சாகா கலைக்கும் வழி வகுக்கும். .......................................................................................................... தமிழ்ச்சித்தர்களின் பெருமை, தமிழின் பெருமை!
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..”
என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம்.
உள்ளம் பெரும் கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தவர்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளபுலன் ஐந்தும் காணா மணி விளக்கே.
இது பாடல் மற்றும் அல்ல இதனை கோவில் வடிவமாகவும் தில்லையில் காணலாம். அய்யன் சீவ தலமான சிதம்பரத்தில் கோவில் கட்டுமானமே நம்மை நமக்கு உணர்த்தும் தத்துவமாக விளங்குகிறது. பொன்னம்பலம் மேல் உள்ள தங்க ஓடுகளின் எண்ணிக்கை 21,600. இது நமது சுவாச காற்று இனையாக உள்ளது. அதன் மேல் பொருந்திய தங்க ஆணிகள் கணக்கு 72000. இது நமது நாடி கணக்கு. வெட்டவெளி என்னும் ஆகாய தலத்தில்பொன்னம்பல மேடையில் சிவசக்தி தாரணை பிரதானரகசியமாய் வெளியாகிறது.இதே நம்முள் இருக்கும் சொர்ண தத்துவம்.
இப்படி பட்ட சொர்ணமான உத்தமன் உள்ளிருக்க அவனை வெளியே
விடாமல் பலகாலம் வேண்ட வழிகளை கீழே திருமூலர் சொல்கிறார்
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.
வில்வதையோ, துளசியை , அருகம்புல்லை வைத்து கூட இறைவனுக்கு அன்பை செலுத்துங்கள். பசுவிற்கு ஒரு வாய் புல் அன்புடன் கொடுங்கள். உண்ணும் பொது ஒரு கவளத்தை முன் வாசலிலோ பின்புறமோ மற்ற உயிரினத்துக்கு அன்போடு அளியுங்கள். சுற்றி இருக்கும் பிறர்க்கு அன்புடன் இன்சொல் கூறுங்கள்.
இது பேர் அன்பு. இதை செய்தால் தெய்வத்தின் அருள் கிட்டும். அது கிட்டினால் பிரபஞ்சம் மற்றும் சித்தர்கள் அன்பு நமக்கு நேரிடையாக கிடைக்கும். அது கிடைத்தால் தன்னை தான் அறியும் ஆசியும் வழியும் கிட்டும். அதுவே சாகா கலைக்கும் வழி வகுக்கும்.
............................................................................................................
திருமூலர் காட்டும் இலிங்கங்கள்.!
இலிங்கம் என்பதற்கு பலரும் பல பொருள்களைக் கூறுகின்றனர். அவற்றுள் முக்கியமாக கீழ்காணும் மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன.
1. லிம் என்பது லயத்தையும் (ஒடுங்குதல்) கம் என்பது வெளிவருதலையும் குறிக்கும். எந்த இடத்தில் பிரளய காலத்தில் சேதன, அசேதனப் பிரபஞ்சங்கள் அனைத்தும் லயம் அடைந்து பின்னர்ப் படைப்புக் காலத்தில் எதிலிருந்து மீண்டும் உற்பத்தியாகின்றனவோ அதுவே லிங்கம் எனப்படுகிறது.
2. லிங்கம் என்பது சித்தரித்தல் எனப் பொருள்படும் என்றும் சிவபெருமான் படைப்பு முதலான ஐந்தொழில்களால் பிரபஞ்சத்தைச் சித்தரிப்பதால் சிவலிங்கம் எனப் பெயர் ஏற்பட்டது என்று வருணபத்தி எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.
3. இலிங்கம் ஒரு பொருளின் சிறப்பியல்பை உணர்த்தும் அடையாளத்தை அல்லது குறியை உணர்த்தும். சிவலிங்கம் என்பது சிவத்துக்கு அடையாளம்.
திரூமூலர் கூறும் இலிங்க வகைகள்
1. அண்ட இலிங்கம்
2. பிண்ட இலிங்கம்
3. சதாசிவ இலிங்கம்
4. ஆத்ம இலிங்கம்
5. ஞான இலிங்கம்
6. சிவ இலிங்கம்
1. அண்ட இலிங்கம்
அண்டம் என்றால் உலகம். இலிங்கம் என்பது குறி. அண்டலிங்கம் என்பது உலகமே சிவனது அடையாளம் என்பதே. உலகினைப் படைக்க விரும்பிய சதாசிவம் தன்னை விட்டு நீங்காத சக்தியின் துணை கொண்டு உலகத்தைத் தோற்றுவித்தான். குண்டலி சக்தியின் ஆற்றலால் உலகம் உருவமாகக் காட்சியளிக்கிறது. சிவசக்தியினாலேயே அவை உலகில் வெவ்வேறு அறிவுடையனவாகக் காணப் பெறுகின்றன. (திருமந்திரம் 1713)
இறைவனது திருவடிகள் கீழுலகமாகும். திருமுடி ஆகாயத்திற்கு அப்பாற்பட்டதாகும். திருமேனி ஆகாயமாகும். இதுதான் சிவபெருமான் உலகமே உருவமாகக் கொண்ட திருக்கோலமாகும். (திருமந்திரம் 1724)
நிலம் - ஆவுடையார், ஆகாயம் - இலிங்கம், கடல் - திருமஞ்சனமாலை, மேகம் - கங்கை நீர், நட்சத்திரங்கள் - ஆகாயலிங்கத்தின் மேலுள்ள மாலை, ஆடை - எட்டு திசைகள் என்று இலிங்கத்தின் அடையாளமாகக் குறிப்பிடலாம் (திருமந்திரம் 1725)
2. பிண்ட இலிங்கம்
மனித உடலையே சிவலிங்க வடிவமாகக் காண்பது பிண்ட இலிங்கம். மக்களின் உடலமைப்பே சிவலிங்கம், சிதம்பரம், சதாசிவம், அருட்பெருங்கூத்து ஆகியவைகளாக அமைந்திருக்கின்றன.
மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்து (திருமந்திரம் 1726)
என்று திருமூலர் கூறுகின்றார்.
மக்கள் தலை - பாணம்
இடைப்பட்ட உடல் - சக்தி பீடம்
கால் முதல் அரை வரை - பிரமபீடம்
எனக் கொண்டால் மானுட ராக்கை வடிவு சிவலிங்கமாகத் தோன்றும். பிண்டத்தைச் சிவலிங்கமாகக் காண்பது இவ்வுடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
3. சதாசிவ இலிங்கம்
இலிங்கத்தைச் சக்தியும் சிவமும் இணைந்த உருவமாகக் காண்பது. சிவனுக்கு
இருதயம் - ஞானசக்தி
தலை - பராசக்தி
தலைமுடி - ஆதிசக்தி
கவசம் - இச்சா சக்தி
நேத்திரம் - கிரியா சக்தி
சக்தியின் வடிவமே சிவனது வடிவமாகும். (திருமந்திரம் 1744) சதாசிவம் உருவமும் அருவமுமாக இருந்து உயிருக்கு உதவி செய்யும். (திருமந்திரம் 1734) சதாசிவ இலிங்கம் சிவமும் சக்தியும் பிரிப்பற்றது என்ற உண்மையை உணர்த்துகிறது.
4. ஆத்ம இலிங்கம்
அனைத்து உயிர்களையும் இறைவனாகக் காண்பது ஆத்ம இலிங்கம் எனப்படுகிறது. இறைவன் உயிருக்குள் உயிராக இருக்கும் நிலை. நாதமும் விந்துவும் கலத்தலே ஆன்மலிங்கம் (திருமந்திரம் 1954) என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.
திருமூலர் முதலிய தவயோகியர் சிவலிங்க வடிவங்களைப் பீடமும் இலிங்கமுமாக வைத்து பீடத்தை விந்து வடிவம் எனவும் இலிங்கத்தை நாத வடிவம் எனவும் உணர்த்தியுள்ளனர்.
நாதம் என்பது முதல்வனது ஞானசக்தி நோக்கத்தினால் சுத்த மாயையில் நேர்க்கோட்டு வடிவில் மேலும் கீழுமாக எழும் ஒரு அசைவைக் குறிக்கும். இவ்விரண்டு அசைவும் முறையே முதல்வனது ஞானசக்தியினாலும், கிரியா சக்தியினாலும் விளைவனவாகச் சிவசக்திகளது சேர்க்கையை உணர்த்தும் என பெரியோர்கள் கருதுகின்றனர். இவ்விரு அலைகளும் இணைந்தும், பிணைந்தும், மாறுபட்டும் உலகப் பொருட்களின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், தேய்ந்து மாய்தலையும் உண்டாக்குகின்றன என்கின்றனர்.
5. ஞான இலிங்கம்
உள்ளம், உரை, செயலைக் கடந்து நிற்கும் இறைவனின் நிலை உணர்தல். இது இறைவனின் சொரூப நிலையை உணர்த்தும். இதற்கு
எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்தவுரைத்து முறைசொல்லின் ஞானமாம் (திருமந்திரம் 1770)
என்று திருமூலர் ஞானத்திற்கு விளக்கம் தருகிறார்.
6. சிவலிங்கம்
அனைத்துமாக விளங்கும் சிவனை ஒரு குறியின் இடமாக எழுந்தருளச் செய்தும் வணங்கும் முறையை உணர்த்துகிறது.
அடையாளமும், உருவமும் இல்லாத ஒன்றை உயிர்கள் மனத்தால் நினைக்கவோ வழிபடவோ முடியாது. பக்குவமில்லாத உயிர்களுக்கு மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் செய்ய முதனையாக இறைவனை உணர்த்தும் ஒரு அடையாளம் தேவையாக இருக்கிறது.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் அக்குறியினிடத்திலும் எழுந்தருளியுள்ளான். இவ்வுண்மையை உணர்ந்து வழிபடாத மக்களின் இயல்பைத் திருமூலர்
குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே (திருமந்திரம் 1773)
என்று கூறுவதை நினைவில் கொண்டு இறைவனை இலிங்க வடிவில் நற்பேறுகளைப் பெற்றுச் சிறப்புடன் வாழ்வோம். ............................................................................................................ தமிழே திருமந்திரமாகும்
திக்கெல்லாம் புகழ்வாய்ந்த ஆசான் திருமூலர் அருளிய திருமந்திரம்
மூல னுரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூல னுரைசெய்த முந்நூறு மந்திரம்
மூல னுரைசெய்த முப்ப துபதேசம்
மூல னுரைசெய்த மூன்றும் ஒன்றாமே.
-திருமந்திரம் 3046-
ஆசான் திருமூலர் அருளிச்செய்த மூவாயிரந் தமிழ்பாடல்களும், முந்நூறு மந்திரப்பாடல்களும், முப்பது உபதேசப்பாடல்களும் ஆகிய மூன்று வகைப்பாடல்களும் ஒரே பொருளைக் குறிப்பனவாம். ............................................................................................................
அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன்உணர்ந் தூழி யிருக்குந்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.
அருமையான {இடைகளை பிங்கலை}கலை ஞானம் உடையவனுக்கு அவன் கலை ஞானத்துள் தொன்றுவார் சிவன். பெருமையான சிவன் பிறவிச் சுழல் நீக்கவல்லவர். இப்படிப்பட்டவர்கள் உலகம் உள்ளளவும் வாழ்வான். இப்படி பட்ட திரு நெறியொழுக்கம் இருப்போருடன் சேர்ந்திருக்கின்றேன்
........................................................................................................... திருமந்திரம்:தீர்த்த உண்மை:2.18.1:
உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.
உடலில் மறைந்து இருக்கும் ஏழு தீர்த்த நீர்கள் உள்ளன..(1 .மூலாதாரம்~7.சகஸ்ரதளம்) இவை அறிந்து இங்கு நின்று/பொருந்தி ஆடினால் வினை கெடும், இதை விடுத்து மலைகளிலும் சுனைகளிலும் மக்கள் தேடுகின்றாரே! ............................................................................................................ ஒப்பார் இல்லை..!
திருமந்திரம்
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
...
திருமூலர் ....
விளக்கம் :
சிவனுக்கு ஒப்பான ஒரு தெய்வத்தை எங்குத் தேடினும் காண இயலவில்லை ..
. எனவே, மற்ற அனைவரும் அவனுக்குத் தாழ்ந்தவரே.
அனைத்து உலகங்களுக்கு அப்பாற்பட்டுப் பொன்போல் விளங்குகின்றான் ...
. மெய்யன்பர்களின் அன்பால் விளங்கும் நெஞ்சத் தாமரையில் ஜோதியாய் உறைகின்றனன் சிவன். ............................................................................................................ திருமந்திரம்: சிவநிந்தை கூடாமை:2.21.௦2
முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்க்கு அல்லது தாங்கஒண் ணாதே.
தேவரும் அசுரரும் ஆற்றல் உடையவரும் வினையில் அகப்பட்டு இருக்க மெய் ஞானம் உணரார். உணர்வில் அன்பை அமுதம் போல் கசிந்து ஊறி நினைந்து இருப்பவரே சிவபெருமானின் உண்மை ஞானத்தைப் பெறவும் அதை தாங்கவும்முடியும். ............................................................................................................ திருமந்திரம்:
வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய்எழுஞ் சூரிய னாமே.
மூங்கிலில் மறைந்து இருக்கும் தனலானது~தீயானது காலத்தே வெளிப்படுவது போல, இந்த உடலில் மறைந்து என்றும் நீங்காமல் இருக்கும் என் தலைவன் சிவன் மும்முலம் ஆகிய இருளை நீக்கி சூரியனைப் போல் பக்குவம் அடைந்த காலத்தே வெளிப்படுவார்.
ஓம் நமசிவாய........சிவாயநம ஓம் ............................................................................................................ திருமந்திரம்: சிவநிந்தை கூடாமை:2.21.௦2
முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்க்கு அல்லது தாங்கஒண் ணாதே.
தேவரும் அசுரரும் ஆற்றல் உடையவரும் வினையில் அகப்பட்டு இருக்க மெய் ஞானம் உணரார். உணர்வில் அன்பை அமுதம் போல் கசிந்து ஊறி நினைந்து இருப்பவரே சிவபெருமானின் உண்மை ஞானத்தைப் பெறவும் அதை தாங்கவும்முடியும். ............................................................................................................ திருமந்திரம்: குரு நிந்தை கூடாமை ௨.௨௨.3
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.
பத்தினிகள், பக்தார்கள், தத்துவ ஞானிகளுடைய மனம் வருந்தும் படி செயல் புரிந்தவர்களது செல்வமும் வாழ்க்கையும் ஒரு வருடத்திருக்குள் அழிந்துவிடும். இது உண்மை, இது சிவனின் ஆணை ............................................................................................................ திருமந்திரம்: அதோமுக தரிசனம்:2.20.5
அதோமுகங் கீழண்ட மான புராணன்
அதோமுகந் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானும்
சதோமுகன் ஊழித் தலைவனு மாமே.
அண்டங்களில் நிறைந்து பழையோனாகிய சிவபெருமான் எங்கும் பொருந்தி நின்று செயலாற்றுவான்.அவனே நூற்றிதழ்த் தாமரை பிரமனும், பிரம கற்பத்திற்குத் தலைவனு மாமே ............................................................................................................ திருமந்திரம் :: உபதேசம்::
ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே
பசுவின் பாலில் இருக்கும் நீரை நீக்கி பருகும் அன்னப்பறவை போல் பிறப்பிற்கான காரணமான வினைகள் அனைத்தும் குருவருளால் சேர்ந்த வித்துப்போலக் கெட்டொழியும்.. ............................................................................................................ திருமந்திரம்: குரு நிந்தை கூடாமை ௨.௨௨.5
கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
நெய்ப்பட்ட பால்இள நீர்தயிர்தான் நிற்கக்
கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞா னிக்கொப்பே
ஞான குரு, கையில் கிடைத்த மாணிக்கம் போன்றும் கையில் இருக்கும் நெய்யுள்ள பாலும், இளநீரும், தயிரும் போன்றவர்... இவர் இருக்க கன்மியை குருவாக கொள்பவன் வெயிலில் காய்ந்து கிடக்கும் கல் எடுத்து சுமப்பவன் போலும், எட்டிப்பழத்தை முயன்று பெற்று உண்பவன் செயல் போல் ஆகிறான்.. ............................................................................................................ திருமந்திரம்: குரு நிந்தை கூடாமை ௨.௨௨.5
கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
நெய்ப்பட்ட பால்இள நீர்தயிர்தான் நிற்கக்
கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞா னிக்கொப்பே
ஞான குரு, கையில் கிடைத்த மாணிக்கம் போன்றும் கையில் இருக்கும் நெய்யுள்ள பாலும், இளநீரும், தயிரும் போன்றவர்... இவர் இருக்க கன்மியை குருவாக கொள்பவன் வெயிலில் காய்ந்து கிடக்கும் கல் எடுத்து சுமப்பவன் போலும், எட்டிப்பழத்தை முயன்று பெற்று உண்பவன் செயல் போல் ஆகிறான்.. ............................................................................................................ திருமந்திரம் :: உபதேசம்::
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
தியானத்தில் மௌனத்தில் துரியத்தில் பரவெளியில் முக்தி அடைந்து சமாதி என்னும் பெருமை பெற்றனரே! ............................................................................................................ திருமந்திரம் :: உபதேசம்::
புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தாற்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
மாசு அற்ற ஸல் சிந்தையுள் சிவனின் கருத்தை வாங்கி உணர்வோர் உடல் வீழ்ந்த பின்னர் சிவ ஜோதியில் கலந்து நிற்கும்..
சிவசிவ சிவசிவ சிவாய சிவசிவ ............................................................................................................ திருமந்திரம் :: உபதேசம்::
திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.
சிவனது திருவடியே அனைத்தும் என்றும் கதி என்றும் இருப்போர் வேறு எதையும் பற்றார்... சிவனடியே பற்றக்கூடியது என்று தெளிந்தோர் இருப்பர் ............................................................................................................ திருமந்திரம்:
திலமத் தனைபொன் சிவஞானிக்கு ஈந்தால்
பலமுத்தி சித்தி பரபோக மும்தரும்
நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும்அற் றேபர போகமும் குன்றுமே ............................................................................................................ திருமந்திரம்: பெரியாரைத் துணைக்கோடல்
தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத்து அங்குஅன்பு வைத்தது இலையாகும்
நீஇடர்ப் பட்டிருந்து என்செய்வாய் நெஞ்சமே
போமிடத்து என்னொடும் போதுகண் டாயே.
நெஞ்சே, துவண்டு தீயில் துன்பப்படும் தளிர் போல் வாடினும் தெளிந்த மனம் கொண்ட பெரியோரிடத்து நீ அன்பு வைத்ததில்லை. இப்படி துன்பத்தில் இருந்து நீ என்ன செய்யப்போகிறாய் மனமே? இறைவனை நாடிப் போகும்போது என்னோடு வருவாயாக! ............................................................................................................ திருமந்திரம்: பெரியாரைத் துணைக்கோடல்
அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன்உணர்ந் தூழி யிருக்குந்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.
அருமையான {இடைகளை பிங்கலை}கலை ஞானம் உடையவனுக்கு அவன் கலை ஞானத்துள் தொன்றுவார் சிவன். பெருமையான சிவன் பிறவிச் சுழல் நீக்கவல்லவர். இப்படிப்பட்டவர்கள் உலகம் உள்ளளவும் வாழ்வான். இப்படி பட்ட திரு நெறியொழுக்கம் இருப்போருடன் சேர்ந்திருக்கின்றேன் ............................................................................................................ நல்ல குருவைக் கொள்ளாமையால் கேடே வரும்..!
"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே"
மக்கள் அஞ்ஞானத்தை நீக்கும் குருவைத் தேடி அடையார்.
அஞ்ஞானத்தைப் போக்காத குருவைத் தான் அடைவர் .
அவர்கள் செயல் பிறவிக் குருடாக இருக்கும்.
இரண்டு குருடர்கள் கண்மூடி ஆடும் ஆட்டம் ஆடிப்
பள்ளத்தில் விழுதலுக்கு ஒப்பாவர்.
குருட்டாட்டம் என்பது சிறு பிள்ளைகள் தம் கண்ணைத்
துணியால் மறைத்துக் கொண்டு, எதிரிலுள்ள
பிள்ளைகளைத் தொட முயற்சி செய்தல். ............................................................................................................ .திருமந்திரம் :: உபதேசம்::
சத்த முதல்ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே
ஊழ் வினையால் உடலும் மனமும் ஆன்மாவை பீடிக்கப்படுகிறது. சத்தம் முதலிய தன்மாத்திரைகள் முதலாக உள்ள கருவிகள் யாவும் அடங்கினால் / அடக்கப்பட்டால் ஆன்மாவான சிற்றொளி பரவெளியாய் இருக்கும் சிவ ஜோதியில் ஐக்கியம் ஆகும். .......................................................................................................... . திருமந்திரம் :: உபதேசம்::
அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.
சூரிய ஒளியால் கடல் நீர் உப்பென்றும் நீர் ஆவி என்றும் பிரிகிறது.. தனி பேர் பெறுகிறது .. இவை இரண்டும் கூடும் பொது ஒருமை பெறுகிறது... அப்படி ஆத்மா சிவனில் இருந்து மாய வசத்தால் கட்டுண்டு இருக்கிறது. மயக்கம் நீங்க சீவன் சிவனுள் அடங்கும்...

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...