Thursday 4 October 2018

ஓம் சரவண பவ

முருகனே சித்திக்கு தலைவன்.
முருகனே முக்திக்கு தலைவன்.
முருகனே ஞானத்திற்கு தலைவன்.
முருகனே யோகத்திற்கும் தலைவன்.
முருகனே பக்திக்கும் தலைவன்.
முருகனே வாழ்வின் ஆதாரம்.
முருகனே இயக்கத்தின் சக்தி.

இப்படி எல்லாவற்றிற்கும் காரணமான முருகனை வணங்குவதற்கே ஒருவன் பலகோடி ஜென்மங்களிலே பல கோடி தவமேனும் செய்திருக்க வேண்டும். முருகனது அருளைப் பெற விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொள்வதோடு எண்ணம், சொல், செயல் என அனைத்திலும் சைவமாக இருந்து சைவத்தலைவன் முருகனது திருவடி பற்றி தினம் தினம் தவறாமல் காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும் முடிந்தால் இரவு பத்து நிமிடமும் பூஜைகளை செய்திடல் அவசியமாகும்.

“ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ நாத்தழும்பேற ஞானத்தலைவன் முருகன் நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க ஞானபண்டிதனின் கருணை நமக்கு கிடைக்கும்.

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...