Thursday 4 October 2018

உடலில் திருநீறு அணியும் இடங்கள் ..

உடலில் திருநீறு அணியும் இடங்கள் ..
**************************************
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன...!
அவை
1.தலை நடுவில் (உச்சி)
2.நெற்றி
3.மார்பு
4.தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5.இடது தோள்
6.வலது தோள்
7.இடது கையின் நடுவில்
8.வலது கையின் நடுவில்
9.இடது மணிக்கட்டு
10.வலது மணிக்கட்டு
11.இடது இடுப்பு
12.வலது இடுப்பு
13.இடது கால் நடுவில்
14.வலது கால் நடுவில்
15.முதுகுக்குக் கீழ்
16.கழுத்து முழுவதும்
17.வலது காதில் ஒரு பொட்டு
18.இடது காதில் ஒரு பொட்டு
#பலன்கள் :
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும்.
இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்...!!!
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!
திருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும்,
திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.
ஓம் நமசிவாய !*
திருச்சிற்றம்பலம்
யாரும் அறியப்படாத *சிவபெருமானின்*
ஆதியை முழுவதுமாக வெளிப்படுத்திய முதல் சமயம் *சைவசமயம்*
முதல் மொழி
*தமிழ்*
முதல் நெறிமுறைகள்
*சைவநெறி *
முதல் குருவழிகள்.
*சித்தர்,நாயன்மார்கள்*
சைவ
சமயத்தின்.
ஒரே தலைவன்
*சிவபெருமான் மட்டுமே*
🌸சிவாய நம
*ஈசன்*
*அடி*
*தேடி*
*பின்பற்றி*
ஆலவாயர் அருட்பணி
மன்றம்
மதுரை....
**மாதம் ஒருமுறை பழமையான சிவனார் ஆலயத்தில் மூலிகை அபிடேக பெருந்திருவிழா நடைபெறுகிறது**சித்தர்கள்,நாயன்மார்கள் வழிபட்ட
மிகப்பழமையான சிவனார் ஆலயங்களை போற்றி பாதுகாப்போம் வழிபடுவோம்

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...