Thursday 4 October 2018

தமிழ் பழமொழி

*தமிழ் பழமொழி*

முழு பூசணிக்காயைய் சோற்றில் மறைப்பது போல என்று திட்டுவதற்க்கு மட்டும் பயன்படுத்துவார்கள்.
(பகிர்வு. ச.க.ம.3.10.18.🙏🙏)
அர்த்தம் சிறுகதை : ஒரு ஊரில் வாழ்ந்து வந்த மிகப்பெரிய பணக்காரர் ஒருவர் பூசணிக்காய் மேல் உள்ள ஆசையில் பக்கத்து வீட்டில் விளைந்த பூசணிக்காயைய் திருடி விடுகிறார் இது ஊரார் அணைவரும் அறிய அவர் பெயர் பூசணிக்காய் திருடன் என்று மாறி போனது.. அவர் வீட்டு பெயரே பூசணி திருடர் வீடு என்று மாறி போனது பல தலமுறைகள் கழிந்தும் பெயர் மாறவில்லை , இப்பொழுது அந்த வீட்டில் அவர் பேரன் வாழ்ந்து வருகிறார் அவர் காதுபடவும் பலர் பூசணிக்காய் திருடர் வீட்டை தாண்டி சென்றால் அந்த கோவில் வரும் என்பது போல் விலாசம் கொடுத்தனர். இதை கேட்ட அந்த பணக்காரர் தாத்தா தெரியாமல் செய்த தவறுக்காக நாம் ஏன் திருடர் பட்டத்தோடு வாழ வேண்டும் என்று எண்ணி ஒரு ஞானியை நாடி சென்றார்.
(பதிவு.ச.கணேசன். மதுரை.3.10.18.🙏🙏)
அவரிடம் நடந்ததை கூறி திருத்தம் கேட்க்க ஞானி அவர் கூறினார் உன் வீட்டில் தினம் நூறு பேருக்கு சாப்பாடு போடு என்று சொல்லி அனுப்ப அவரும் போட ஆரம்பித்தார் ஒரு வாரத்தில் அவர் காது பட கேட்டார் அந்த தச்சர் வீடு எங்கு உள்ளது என்று கேட்க்க ஒருவர் கூறினார் அங்கே ஒரு சோறு போடுற ஐயா வீடு உள்ளது அதில் இருந்து மூன்றாவது வீடு என்று விலாசம் கூறினர் மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பினார்.

விளக்கம். பூசணிக்காய் திருடியதை சோறு போட்டு நல்ல பெயர் வாங்கி மறைத்தார்.

தவறு செய்து மறைத்தல் அல்ல இது ... நல்லதை செய் தவறு தானாக மறையும் என்பதே கருத்து.
நட்புடன்! !!!!!!!!!

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...