Thursday 3 January 2019

சித்த போகர் செய்து ஓட்டிய மரக்கப்பல்

சித்த போகர் செய்து ஓட்டிய மரக்கப்பல்
******************************************
" பாற்கடலின் மத்திமத்தில் மகத்தான மரக்கப்பல் ஒன்று செய்தேன். ஆயிரம் பேர் பயணிக்க கூடிய அக் கப்பலை சீனபதி மக்கள் மிகவும் மெச்சினார்கள். அதன் நீளம் 800கஜம், அகலம் 100 கஜம். (1 கஜம் என்பது 3 அடி). நீள் சதுரமான அதை எப்படி பிசகில்லாமல் செய்து முடித்தேன் என்று சொல்கிறேன்.
வலுவான பலகைகள் எடுத்து வில்லாணி அடித்து நீளமான கட்டுமானம் செய்தேன். அதன் மத்தியில் பீடம் அமைத்து, அதை முழு உயரத்திற்கு கொண்டு சேர்த்தேன். கப்பலில் ஏழு தளங்கள் அமைத்தேன், ஒவ்வொன்றிலும் தொட்டிஎன்ற பீடம் வைத்து, உயரம் நூறு கஜம் உயரம் கொண்ட மண்டப தூண்கள் அமைத்தேன். கீழிருந்து முதல் மாடிக்கு செல்ல சாளரமும் கதவும் வைத்து வழி செய்து, எல்லா தளங்களையும் சேர்த்து மொத்தம் 64 வீடுகளை கட்டி கிழக்கு-மேற்காக 128 வாசலோடும், தெற்கு-வடக்கு முகமாய் உருதியாணி அடித்து கண்ணாடி சாளரங்கள் வைத்து, கப்பலின் சுவரோரம் கம்பிகள் வைத்து ஒரு பெரிய கோட்டையை பாங்குடன் அமைத்தேன்.
தளத்தின் ஒருபுறம் சுக்கான் அமைத்து, நால்புறமும் கதவு வைத்து, ஒவ்வொரு தளத்திலும் பரண் (deck) அமைத்து, வடம் வைத்து சங்கிலி கொண்டு சுக்கான் போட ஏதுவாக வழி செய்து, கப்பலின் மேலிருந்து கீழ்வரை இரும்பு குழாய் உருளை அமைத்து (pipes) வைத்தேன். தளத்தின் தலைபுரத்தில் அக்னிவைத்தேன், இடப்பக்கம் தண்ணீர் தொட்டி அமைத்து, (boiler) கொதிகலன் செய்து, (airtight) குழாய்கள் கசிவின்றி நீராவி கொண்டு செல்லும். கீழ்நிலையில் பொருத்திய சக்கரங்களை (turbine shaft) நீராவியின் உயர் அழுத்தம் கொண்டு திருப்ப, கப்பலும் நகரலாச்சு.
கடைசி முனையில் வசதியாய் நங்கூரம் மாட்டி, கப்பல் ஓடாமல் இருக்க அதை தட்டிப் போட்டேன். கீழ்நிலையில் கொதிபெரும் நீராவிக்கு வெப்பமூட்டும் அக்கினியின் புகை சூழாதிருக்க, வாட்டமுடன் எட்டங்கால் மேலே புகைபோக்கியும் (chimney) இரும்பினால் அமைத்தேன். நீராவியின் நிதானம் அறிந்து நேர்த்தியுடன் சூத்திரமுடன் ஓட்டினேன். வெகு ஜனகளையும், சித்தர் முனிகளையும் எற்றிபோனேன்.
மேல் அறையில் நானிருந்து சுக்கானை இடமும் வலமும் வளைத்து முடக்கிட்டேன். கடல் ஏழும் சுத்தி வந்து இமயகிரி பக்கத்தில் சீனபதி கடலோரம் கப்பலை வாகாக வந்து நிறுத்தினேன். என்மீது பட்சம் வைத்து என் நூதனமான வித்தைகளுக்கு அருள்புரிந்த திருமூலர்/ காலாங்கிநாதர் பாதங்களுக்கு என் அனந்தங்கள்".
இவ்வாறு போகர் தன சப்தகாண்டத்தில் சொல்லியுள்ளதை என்னால்முடிந்தவரை சுருக்கமாக இங்கே பதிவேற்றினேன். என் ஆய்வில் சீனாவில் இவர் வந்து நிறுத்திய இடம் மவுண்ட் கிங்யாங் பகுதி என அறிந்து கொண்டேன். அன்றே அவர் Underwater telescope பொருத்தியுமிருந்தார். பரங்கியர் தேசத்தில் (சீனராக) 12000 வருடங்கள் வாழ்ந்தேன் என்று சொல்லியுள்ள போகர், துவாபரயுக பிறபகுதியில் (அ) கலியுகத்தின் முற்பகுதியில் இந்த பிரம்மாண்டமான டைடானிக் போன்ற கப்பல் கட்டுமான சாதனையை செய்திருப்பார் என்று நினைக்கிறன்.

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...