Thursday 3 January 2019

*நம்பிக்கை* − *அவநம்பிக்கை*



*நம்பிக்கை* − *அவநம்பிக்கை*

மேலே உள்ள இரண்டுமே நம் மனதில் தான் உள்ளது

எதைக் கை கொள்வது என்பது நாம் தான் முடிவு செய்யவேண்டும்

இதை ஒரு கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்

ஒருவர்(ஆண்,பெண்,அல்லது திருநங்கை)

கங்கையின் ஒரு கரையில் நின்று கொண்டு மறுகரைக்குச் செல்லவேண்டும் ,அவனுக்கு நீச்சல் தெரியாது.
கங்கையில் தண்ணீரின் வேகம் சற்று மிதமாகவே இருந்தது,ஆனால் அவனுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல வேண்டும்,என்ன
செய்வது என்று தெரியாமல் ,கடவுளை வேண்டினான்,அதிலும் அவனுக்குச் சந்தேகம்,
கடவுள் எங்கே நமக்கெல்லாம் உதவப்போகிறார் என்று,

ஆனால் கடவுளானவர் எப்பொழுதுமே நம்பிக்கை உள்ளவருக்கு உதவுவதும்,

அவநம்பிக்கை உள்ளவருக்கு (உதவாமல் இல்லை)அவர் எண்ணப்படியே விட்டுவிடுகிறார்

இவன் முதலில் சிறிது நம்பிக்கையோடு வணங்கியதால் இவனுக்கு உதவிட முன் வந்தார்

அவன் என்ன செய்ய என்று கரையில் சிறிது தூரம் புலம்பியவாறு நடந்தான்

அப்போது அவன் கண்ணில் நீச்சல் தெரியாதவர்கள் அணியும் உடை ஒன்று கிடந்தது தெரிந்தது

அதை சந்தோசத்துடன் எடுத்துப் போட்டவனுக்கு மீண்டும் பயம் வந்துவிட்டது,இது நம்மை அக்கரையில் கொண்டு சேர்க்குமோ? ,சேர்க்காதோ? என்று,
மேலும் சிறது தூரம் அந்த உடையை மாட்டிக்கொண்டு நடந்தான்

அப்போது ஒரு ஆள் அமர்ந்து பயணிக்க கூடிய அளவு உள்ள மரக்கலம் ஒன்று கிடைத்தது

உடனே அதில் ஏறிக்கரையை கடக்கலாம் இந்த உடையை அணிந்து கொண்டு என்று நினைத்தவன்,வேகமாக அதன் அருகில் சென்றான்,

மீண்டும் அவனுக்கு பயம் வந்துவிட்டது,இது அக்கரையைச் சேர்க்குமா? என்று

இன்னும் கொஞ்சதூரம் சென்றதும் ,துடுப்புடன் படகு ஒன்று தென்பட்டது

மிகுந்த மகிழ்ச்சியுடன் அங்கே சென்றவன் ,

படகில் ஏறி அமரப்போகும் வேளையில்,நாம் சரியாக துடுப்பு போடாவிட்டால்,அக்கரையை அடைய முடியாது ,என்ன செய்வது என்று வழக்கம் போல் பயந்தான்,

மேலும் சிறிது தூரம் செல்ல ,என்ன அதிசயம் அங்கே இவனுக்காகவே *ஒருவர்* படகுடன் காத்திருப்பதைக் கண்டான்

சந்தோசத்தில் துள்ளிக்குதித்து ,கடவுளுக்கு நன்றி சொல்லி அவரிடம் சென்றான்

மீண்டும் பழையபடி அவனுடைய அறிவுச்சிந்தனை தலைதூக்கியது

இவர் ஒழுங்காக படகு ஒட்டுவாரா? என்று

அதை தயக்கமின்றி அவரிடமே கேட்டான்

அதற்கு அவர் *நான்* தினசரி எத்தனையோ பேரை கரை சேர்க்கிறேன்

அதனால் பயப்படாமல் வாருங்கள் என்றார்

சரி என்று அவன் நினைத்து ஏறப்போகும் நிலையில்

அவனது குரங்கு மனம் போகும் போது படகு ஓட்டையாகி தண்ணீர் உள்ளே வந்துவிட்டால் ,அவருக்கு நீச்சல் தெரியும் ,தனக்கு தெரியாதே என்று அவன் நினைத்தான்.

இவ்வாறு அவன் நினைத்துக்கொண்டிருக்கும் போதே

அந்த ஓடக்காரர் அக்கரையில் நின்றிருந்தார்

அதற்குள் கங்கையில் நீரின் அளவு மிக மிக அதிகமாகி இருந்தது

அந்த ஒடக்காரர் வேறு யாருமல்ல ஏக இறைவனே

நாம்சம்சாரக்கடலை கடந்து நம்மைகரை சேர்ப்பதற்காக எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறான்.

இப்பொழுதும் அவனிடம்( இக்கரையில் நிற்பவனிடம்)

அந்த உடை உள்ளது

தேவை நம்பிக்கை மட்டுமே

இது இருந்திருந்தால்,இத்தனை வாய்ப்புகள் வந்தபோதே அக்கரையை
அடைந்து இருக்கலாம்.

கடவுள் மிகப் பெரிய கருணை வள்ளல்

அதனால் அவனிடம் அந்த உடையை விட்டுச் சென்றார்

தன்னை நம்பியவருக்கும்,நம்பாதவருக்கும் உதவும் வள்ளல் அவன்

நம்பாதவருக்கே உதவும் போது,நம்பியவருக்கு?

அனுபவத்தில் அறிந்து கொள்ளுங்கள்

ஆச்சரியமூட்டும் அற்புதங்களை உங்கள் வாழக்கைப் பயணத்தில்!!!

இதையும் கதை போல் யாராவது சொல்வார்களா? என்று இருக்காமல்

அவன் மேல் நம்பிக்கே கொள்ளுங்கள்

*அவன்* *அனைவருக்கும்* *பொதுவானவனே*

*யாவரும்* *பெற* *உறும்* *ஈசன்* *_காண்க_* !!

*அவன்* ( *ள்* ) *அருளாளே* *அவன்* ( *ள்* ) *தாள்* *வணங்கி*

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...