தாயின் வயிற்றில் இருக்கும் 10 மாத வாழ்க்கையில் நடப்பவை என்ன? மனித வாழ்வில்ஜீவன் 9 கிரகங்களின் ஆதிக்கமே என்பதை நம் சித்தர்கள் அன்றே கண்ட மெஞ்ஞானம், ஆம் கருப்பை முதல் கல்லரை வரை மனிதனை இயக்குவது கிரகங்களே! முதல் மாதத்தில் சுரோணிதமும், சுக்கிலமும் இரண்டற கலக்க காரணமாவதே சுக்கிரதேவனால் இரண்டாவது மாதத்தில் கரு பிண்டமாக வளர செவ்வாய் தேவனும் மூன்றாம் மாதத்தில் கைகால் அங்கங்கள் வளர குருதேவனும் நாங்காம் மாதத்தில்எலும்பு நரம்பு வளர சூரியன்தேவனும், ஐந்தாம் மாதத்தில் தோலை சந்திரன்தேவனும்,ஆறாம் மாதத்தில் நகம் ரோமத்தை சனி தேவனும், எட்டாம் மாதத்தில் பிராணன் அதாவது புத்தியை புதன் பகவானும், ஒன்பதும் பத்தும் மாதத்தில் பூர்ண சிசுவாக மீண்டும் சந்திர தேவனால் முழுமை அடைந்து இந்த உலகை காண அவரவர் செய்த பாவ புண்ணிய படி பிரசவமாகிறது, ஆக 9 கிரகங்களே இந்த உடம்பின் பிரதாண அதிபதிகள், ஆகையால் கிரகங்களை வணங்கி பரி காரங்கள் செய்து வாருங்கள் என்று உங்களை தலை வணங்கி கேட்டுக்கொள்கிறேன். எல்லாமே சுலபமாக நடக்கும்.
Tuesday, 18 September 2018
human வாகி
மூலவிந்துவே காம விந்துவாகி
காம விந்துவே ஜீவனாகி,
ஜீவனே சிவன்விந்துவாகி,
சிவன்விந்துவே நாத விந்துவாகி,
நாதவிந்துவே ஞான விந்துவாகி,
ஞானவிந்துவே பரம சுகந்தமானதே.
காம விந்துவே ஜீவனாகி,
ஜீவனே சிவன்விந்துவாகி,
சிவன்விந்துவே நாத விந்துவாகி,
நாதவிந்துவே ஞான விந்துவாகி,
ஞானவிந்துவே பரம சுகந்தமானதே.
யாகம் நன்மைகள்…
யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்…….
ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார் . மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.
1. கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி ஹோமம்.
2. பில்லி சூனியம், எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம்.
3. ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம்.
4. நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம்.
5. வாழவில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம்.
ஆகிய ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்.
உங்களை நம்புங்கள்
*உங்களை நம்புங்கள்*
தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புதலாகும், கடின உழைப்பு, விடா முயற்சி, திட்டமிடல் என்றெல்லாம் சொல்லுகிறோம் இவைகளையெல்லாம் சும்மா வெறுமனே பின்பற்ற முடியாது, தன்னம்பிக்கை இருந்தால்தான் அவைகளெல்லாம் கைகூடும். எனவே எல்லாவற்றிர்க்கும் அடிப்படை தன்னை நம்புதலாகும்.
ஒரு வாகனத்தை, ஒரு இரயில் வண்டியை ஏதோ ஒரு இயந்திர சக்தி உந்தி தள்ளி விடுகிறதல்லவா, அது போல தன்னம்பிக்கை என்னும் மனித க்தி நம்மில் நிறைந்திருந்தால்தான் அது முன்னேற்ற பாதையை நோக்கி நம்மை உந்திச் செல்லும்.
சிறிதளவேனும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது,
பிச்சைக்காரன் கூட நான் பிச்சையெடுத்தால் இவ்வளவு சம்பாதிப்பேன் என்ற தன்மீதுள்ள நம்பிக்கையில்தான் களத்தில் இறங்குகிறான், இயற்கையிலே நாம் நம்மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம், ஆனால் அது போதுமான அளவு இருப்பதில்லை அதை வளர்த்துக் கொள்வதே நம் வளச்சிக்கான சரியான வழியாகும். சிறிதளவே நம்பிக்கையை வைத்துக்கொண்டு செயலில் இறங்கினால் இறுதியில் சோர்ந்து, துவண்டு போய் விடுவோம், முழுவதுமாக நிரம்பப்பெற்ற நம்பிக்கையே வெற்றியின் உச்சியில் நம்மை கொண்டுசெல்லும்.
*உங்கள் பலகீனங்களை விட பலத்தை அதிகப்படுத்துங்கள், சோம்பல்களை விட உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள், அறியாமையை விட அறிவை அதிகப்படுத்துங்கள், எதிர்மறை சிந்தனைகளை விட நேர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துங்கள்*.
இப்படி உங்களிடமுள்ள அழிவு சக்திகளை விட ஆக்க சக்திகளை அதிகரிக்கச் செய்யும்போது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அப்படி ஏற்படும் நம்பிக்கையை குறைக்கவிடாமல் தினந்தோறும் அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். நேற்றைவிட இன்று வளர்சியடைந்துள்ளேன், இன்றை விட நாளை வளர்ச்சியடைவேன் என்பதில் உறுதியாயிருங்கள்
தன்னம்பிக்கைக்கும் ஆழ்மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு, ஆழ் மனதின் வல்லமையை தட்டி எழுப்ப நம்பிக்கை தருகின்ற விஷயங்களை, வார்த்தைகளை அதற்கு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
எத்தனை தோல்விகளை நீங்கள் சந்தித்திருந்தாலும் 'வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு' எனவே விழித்துக்கொள், வெற்றியை நோக்கி விரைந்திடு சற்றும் தாமதியாதே என்று ஆழ்மனதில் பதித்துக்கொள்ளுங்கள், உங்கள் லட்சியத்தையும் பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள்
வெறுமனே ஒரு மொபைல் போன் வாங்குவதையோ, டிவி வாங்குவதையோ, கம்ப்யூட்டர், பைக், கார், அழகான வீடு போன்றவற்றை வாங்குவதையோ லட்சியமாக கொள்ளாதீர்கள் அவைகள் லட்சியத்தின் சிறு பகுதியாகவே இருக்கட்டும். , நீங்கள் இதைவிடவும் பெரிய லட்சியத்தை கொண்டிருங்கள், ஏனைனில் பெரும்பாலும் கார், பங்ளா போன்ற இவைகளெல்லாம் தன்னம்பிக்கையினால் கிடைப்பதாக இருக்காது அளவுகடந்த ஆசையின் வேகத்தினாலே கிடைப்பதாகவே இருக்கும், எனவே தன்னம்பிக்கை என்னும் உந்து சக்தியை உயர்ந்த குறிக்கோளை நோக்கி வைங்கள்.
இவனா! இவனுக்கு என்ன தெரியும், இவனுக்கு ஒன்றுமே தெரியாது, இவனிடம் அப்படி ஒன்றுமில்லை இப்படி உங்களைப் பற்றி பேசுகிறவர்களுக்கு நீங்கள் நிரூபிக்க வேண்டியது உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்பதைதான்.
*நீங்கள் யாராகவும் இருக்கலாம், படிக்காதவர்களாக இருக்கலாம் பரவாயில்லை தன்னம்பிக்கை கொள்ளுங்கள், உங்கள் ஆர்வத்தை, திறமையை சற்று கண்ணோட்டமிடுங்கள் அடுத்த கணமே களத்தில் இறங்குங்கள் எதையாவது சாதியுங்கள், திரும்பி பார்க்க வேண்டாம் உங்கள் கண்முன்னே தெரிவதெல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக இருக்கட்டும், வெற்றி படிகளில் பயணியுங்கள் மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணியாகுங்கள்*

அஷ்டலட்சுமி
#அஷ்டலட்சுமி
1.ஆதிலட்சுமி
மகாலட்சுமி,பிருகுமுனிவரின் மகளாக அவதரித்தவள். திருமகளின் மிகப்பழைமையான தோற்றம்.இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் அழைக்கின்றார்கள். தாமரை, வெண்கொடி, அஞ்சல், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை.
2.தனலட்சுமி
பொன், பணம் என்பவற்றை அருளும் அன்னை.சக்கரம்,சங்கு, கலசம், வில்லம்பு, தாமரை, அஞ்சேல் என்பவற்றைத் தாங்கும் ஆறுகரம் கொண்டவள்.
3.தானியலட்சுமி
வேளாண்மை வளம் பெருக்கும் தேவி.பசுந்துகில் தரித்து, நெற்கதிர், கரும்பு, வாழை, தாமரைகள், கதை, அஞ்சேல், அருளல் தரித்தஎண்கரம் கொண்டருளும் தாயார்.
4.கஜலட்சுமி
கால்நடைகள் மூலம் வளம் அருள்பவள்.இவளே அரசரொக்கும் பெருஞ்செல்வங்கள் தருபவள்.பாற்கடலிலிருந்து உதித்தவளும் இவளே இருயானைகள் நீராட்ட, அஞ்சேல், அருளல், தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருளுவாள்.
5.சந்தானலட்சுமி
குழந்தைப்பேறு அருளும் திருமகள்.கலசங்கள், கத்தி, கேடயம், அஞ்சேல் தரித்த அறுகரத்தவள். மடியில் குழந்தையொன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.
6.தைரியலட்சுமி
வீரம், வலிமை, அருளுவாள்.துன்பகரமான தருணங்களில் வாழ்க்கையில் துணிவைத் தரும் தாயார். செவ்வாடை தரித்தவள். சங்கு, சக்கர, வில், அம்பு, கத்தி, ஓலைச்சுவடி, அஞ்சேல், அருளல் என்பவற்றைத் தாங்கிய்ய எண்கரத்தினள்.
7.விஜயலட்சுமி
யுத்தங்களில் மாத்திரமன்றி, எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற அருளுவாள்.சங்கு, சக்கரம், பாசம், கத்தி, கேடயம், தாமரை, அஞ்சேல், அருளல் என எட்டுக்கரங்களுடன் காட்சியளிப்பவள்.
8.வித்யாலட்சுமி
அறிவையும் கலைகளில் வல்லமயும் தருபவள்.வெண்துகிலுடுத்து, அஞ்சேல், அபயம், தாமரைகள் ஏந்திய நாற்கரத்தினள்.
"ஸ்ரீ மகாலட்சுமி தாயார் திருவடிகளே சரணம்"
Monday, 17 September 2018
அறிவோம் நீதி சாஸ்திரம்
அறிவோம் நீதி சாஸ்திரம்;
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.
இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
விரோதியை நம்பலாம்.
ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது.
மன்னிக்கவும் கூடாது.
ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது.
மன்னிக்கவும் கூடாது.
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.
இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.
Tuesday, 4 September 2018
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது. அதனால் கீழ்க்காணும் பலன்கள் கிடைக்கும்.
முல்லை இலை – அறம் வளரும்
கரிசலாங்கண்ணி இலை – இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்
வில்வம் இலை – இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
அருகம்புல் – அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்
இலந்தை இலை – கல்வியில் மேன்மை அடையலாம்
ஊமத்தை இலை – பெருந்தன்மை கைவரப் பெறும்.
வன்னி இலை – பூவுல வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கும்
நாயுருவி – முகப் பொலிவும், அழகும் கூடும்.
கண்டங்கத்திரி – வீரமும், தைரியமும் கிடைக்கும்
அரளி இலை – எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்
எருக்கம் இலை – கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும்
மருதம் இலை – மகப்பேறு கிடைக்கும்
விஷ்ணுகிராந்தி இலை – நுண்ணறிவு கைவரப் பெறும்
மாதுளை இலை – பெரும் புகழும், நற்பெயரும் கிடைக்கும்
தேவதாரு இலை – எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்
மருக்கொழுந்து இலை – இல்லற சுகம் கிடைக்கப் பெறும்
அரசம் இலை – உயர் பதவியும் பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்
ஜாதிமல்லி இலை – சொந்த வீடு, மனை,பூமி பாக்கியம் கிடைக்கும்
தாழம் இலை – செல்வச் செழிப்பு உண்டாகும்.
அகத்தி இலை – கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்...
*நம்முடம் வாழ்வோரைப்புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்..!!*
*தெரிந்தே தவறு செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே...*
*அவர்கள் செய்த தவறுகளை நியாயம் படுத்த பல பதில்களை வைத்திருப்பார்கள்…*
Subscribe to:
Posts (Atom)
சுவாசம்!
# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...
-
அகத்திய_பெருமானின்_பதினாற ு_போற்றிகள் : 1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி! 2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி! 3. தென் திசை, ...
-
மஹா சனிப்பிரதோஷம் : சிவன் கோவிலிற்கு செல்ல மறக்காதீர்கள் !! 🌟 பிரதோஷங்களில் மிகவும் முக்கியமானது சனி பிரதோஷம் ஆகும். திரியோதசி திதியும...
-
# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...